பாதுகாப்பற்ற தொடக்கப்பள்ளி

Update: 2022-07-24 14:12 GMT

கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, திருக்காடுதுறை அருகே கட்டிப்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்க சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இதுவரை கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப்பள்ளியில் சமூக விரோதிகளும், பாம்பு மற்றும் விஷப்பூச்சிகளும் இங்கு அதிகமாக நடமாடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. எனவே குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக இந்த பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்