நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2023-07-23 13:44 GMT

பெரம்பலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு சென்னை பஸ்கள் வந்து செல்லும் இடத்தில் போதிய கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் அப்பகுதியில் திறந்தவெளியிலும், சாலை ஓரத்திலும் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிவறைகள் அமைத்து பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்