பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமம் நல்லெரி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழை பெய்யும் போது மழை நீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சுமார் 10 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பணி தற்போது பாதியில் நிற்பதினால், மழை பெய்யும் போது வந்த தண்ணீர் வெளியேற வழிஇன்றி பாதி அளவில் அமைக்கப்பட்டுள்ள வடிகள் வாய்க்கால்களில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசு தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.