பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் குடிக்காடு கிராமம் ஆதிதிராவிடர் தெரு பகுதியில் ஊருக்கும் நடுவில் இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பொது கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கிணற்றை இப்பகுதி மக்கள் அதிக அளவில் பயன்படுத்தாததால் இதன் சுற்றுச்சுவரில் இளைஞர்கள், சிறுவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தவறி கிணற்றில் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த கிணற்றின் அருகே தொடக்கப்பள்ளியும், ரேஷன் கடையும் செயல்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கிணற்றின் மேற்பகுதியில் இரும்பு வலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.