இருக்கை இன்றி தவிக்கும் ரெயில் பயணிகள்

Update: 2023-07-23 12:00 GMT

திருச்சி ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான ரெயில்கள் வந்து செல்கின்றன. இங்கு வரும் ரெயில்களில் ஏராளமான ரெயில் பயணிகள் ஏறி வெளியூருக்கு செல்கின்றனர். அப்போது இரவு நேரத்தில் ரெயில் பயணிகள் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் ஏற முடியாத அளவிற்கு கூட்ட நெறிசல் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், இருக்கைகளிலும், உடைமைகளை வைக்கும் பகுதிகளிலும் படுத்து உறங்கிக் கொண்டு வருகின்றனர். அவர்களை எந்திரிக்க கூறினாலும், அவர்கள் எந்திரிக்க மறுக்கின்றனர். இதனால் பயணிகள் இருக்கைகள் இன்றி கால்கடுக்க நின்று பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது. இதனால் சிலர் ரெயில் பெட்டியின் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து முன்பதிவு இல்லாத பெட்டிகளில் உறங்கும் பணயிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்