நாகை மாவட்டத்தில் உள்ள இடையாத்தாங்குடி சிவன் கோவில் பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் முறையான பராமரிப்பின்றி ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது இதனால் அந்த பகுதி மக்கள் குளத்து நீரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும், ஆகாயத்தாமரைகளால் குளத்தில் இருக்கும் நீர் மாசடைகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.