வாகனம் அகற்றப்படுமா?
தக்கலை மார்க்கெட் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வாசலில் பழுதான உருளை என்ஜின் வாகனம் வருட கணக்கில் நிறுத்தப்பட்டிருக்கிறது. துருப்பிடித்து காணப்படும் இதன் பாகங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?