விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா அந்திலி கிராமத்தில் அருகருகே 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன. 100 மீட்டர் தூரத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் மதுகுடிக்கும் மதுபிரியர்கள் ஆபாசமாக பேசுவது, தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே 2 டாஸ்மாக் கடைகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.