திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் பல மாதங்களாக மூடியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக திருவேங்கடம், சங்கரன்கோவிலுக்கு சென்று ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து வருகின்றனர். எனவே கலிங்கப்பட்டியில் ஏ.டி.எம். மையம் மீண்டும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.