நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் ரெயில் நிலையம் அமைந்து உள்ளது. துறையூர் சாலையில் வசிக்கும் பொதுமக்கள் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு கொசவம்பட்டி ஏரிக்கரை வழியாக இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையின் ஓரமாக சிலர் கழிவு பொருட்களை கொட்டி எரிக்கின்றனர். இதனால் எழும்பும் புகைமூட்டத்தால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரமாக கழிவுகளை கொட்டி எரிக்கும் நபர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.