சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 250 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் கரும்பு விவசாயம் செய்துள்ளனர். இந்த விளைநிலங்களில் அவ்வப்போது காட்டுப்பன்றிகள் புகுந்து கரும்புகளை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளுக்கு மிகவும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.