ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக ஆங்கேங்கே தேங்கிய மழைநீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி உள்ளது. இந்த கொசுக்களினால் மலேரியா, டெங்கு நோய்தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுக்கடியால் பொதுமக்கள் மிகவும் இரவு நேரங்களில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.