குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட செக்கால தெருவில் அங்கன்வாடி அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடிக்கு செல்லும் நடைபாதையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. இதனால், அங்கு விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி செடி, கொடிகளை அகற்றி நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.