இரணியலில் இருந்து ராஜாக்கமங்கலம் செல்லும் சாலையில் மடவிளாகம் பகுதியில் சாலையோரத்தில் பட்டுப்போன மரம் ஒன்று நின்றது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.