வேப்பூரில் இருந்து பூலாம்பாடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.