அபாய நிலையில் ரேஷன் கடை கட்டிடம்

Update: 2023-07-16 15:11 GMT

அபாய நிலையில் ரேஷன் கடை கட்டிடம்

திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு கே.ஜி.கார்டன் பகுதியில் பாழடைந்த நிைலயில் பழைய ரேஷன் கடை கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை, ஜன்னல் மற்றும் சுவர் ஆகிய பகுதியில் விரிசல் ஏற்பட்டும், படிகட்டுகள் மற்றும் தரைதளம் ஆகியவை பெயர்ந்து இருப்பதால் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் இக்கட்டிடத்தின் அருகில் மாற்றியமைக்கப்பட்ட ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவை அமைந்துள்ளதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். எனவே இந்த பழைய கட்டிடத்தால் விபத்து ஏற்படும் முன் முழுமையாக இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

----------

பிரவு,திருப்பூர்.

87966 463836

மேலும் செய்திகள்