பெங்களூரு டி.சி.பாளையா முனியப்பாநகர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் உள்ளது. ஆனால் பல மாதங்களாக அந்த குடிநீர் மையம் மூடி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியினர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிடிப்பதற்காக பல இடங்களுக்கு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.