காட்சி பொருளாக இருக்கும் வழிகாட்டி பலகை

Update: 2023-07-16 12:45 GMT

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தஞ்சை-நாகை சாலையோரத்தில் பெயர் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பெயர்பலகையில் ஊர்பெயர் இன்றி காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் வழித்தவறி செல்லும் சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பெயர்பலகையில் ஊர்பெயர் எழுத நடவடிக்கை எடுப்பார்களர்?

மேலும் செய்திகள்

மயான வசதி