திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு நூலகம் அமைக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் திருச்செந்தூர், ஆறுமுகநேரியில் உள்ள நூலகத்துக்கு சென்று வருகின்றனர். எனவே அடைக்கலாபுரத்தில் நூலகம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.