பழனி வேல் ரவுண்டானா பகுதியில் இருந்து திருஆவினன்குடி செல்லும் பிரதான குளத்து ரோட்டில் கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் எதுவும் எரிவதில்லை. இதனால் அந்தப் பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள், பக்தர்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்குகளை எரிய செய்ய வேண்டும்.