மாட்டுத்தொழுவமான விளையாட்டு மைதானம்

Update: 2023-07-12 16:37 GMT
திட்டக்குடி தாலுகா ஆவினங்குடி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. தற்போது இந்த விளையாட்டு மைதானத்தில் சிலர் மாடுகளை கட்டிச்செல்கின்றனர். இதனால் மாட்டுத்தொழுவமாக விளையாட்டு மைதானம் மாறி வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிள்களும் அதிக அளவில் நிறுத்தப்படுகிறது. இதனால் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதை அப்புறப்படுத்திவிட்டு, விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்