சங்கராபுரம் தாலூகா ராவுத்தநல்லூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலர் இல்லை. இதனால் பிரம்மகுண்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் தான் ராவுத்தநல்லூருக்கும் வந்து பணி செய்யும் நிலை உள்ளது. இந்ந நிலையில் நிரந்தர கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால் ராவுத்தநல்லூரில் உள்ள கிராம நிா்வாக அலுவலகம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. எனவே ராவுத்தநல்லூரில் நிரந்தர கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டும் என்று கிராம மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.