விழுப்புரம் நகராட்சி 3-வது வார்டு சித்தேரி கரை பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. இருப்பினும் தற்போது வரை அந்த பள்ளம் மூடப்படாமல் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்தை ஏற்படுத்த துடிக்கும் பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.