பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் பகுதியில் சாலையின் ஓரத்தில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் அவர் சாலையில் இருந்து இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து இருக்கும் கட்டுமான பொருட்களை அகற்ற வேண்டும்.