பெங்களூரு கலாசிபாளையா பகுதியில் உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது நகரில் மழை பெய்து வருவதால் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.