பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்து பயனற்று இருந்த ஒரு கட்டிடம் மற்றும் சத்துணவு கூடத்தை மாணவ-மாணவிகளின் நலன் கருதி அகற்ற வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்து காணப்பட்ட கட்டிடத்தை அகற்றினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.