விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள இலவச சிறுநீர் கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், கழிப்பறையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கழிப்பறை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே கழிப்பறையை சீரமைப்பதோடு, வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்து சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.