காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் போன்ற பகுதிகளில் உள்ள கல்லூரிக்கு ஏராளமான மாணவர்கள் தினசரி பஸ்சில் சென்று வருகின்றனர். ஆனால் போதுமான அளவு பஸ் வசதி இல்லாததால், படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.