சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் சமீப காலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்களை துரத்தும் அபாயம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.