பொது இடம் ஆக்கிரமிப்பு

Update: 2023-07-09 13:44 GMT

திருச்சி மாநகராட்சி ஏர்போர்ட் அண்ணா நகர் குமரன் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனி நபர் ஒருவர் சாலை ஓரத்தில் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சிறிய அளவிலான கோவிலை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாயை அனுமதி என்று பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்