நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதி கீழையூரை அடுத்த கருங்கண்ணி அருகே சந்திரநதி குறுக்கே 2 மரப்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த மரப்பாலங்கள் மூலமாக ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.இந்த நிலையில் மரப்பாலம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக மரப்பாலம் வழியாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், ஆற்றில் தற்போது தண்ணீர் செல்வதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள மரப்பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?