நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி வடமழை மணக்காடு ஊராட்சியில் தெற்குகாரிக்கன் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் குறுக்கே மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்வழியாக பொதுமக்கள் வாய்க்காலை கடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் மரப்பாலம் அடிக்கடி சேதம் அடைந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி மரப்பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?