பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களின் தேவைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இங்கு பணி நேரத்தில் அலுவலகத்தில் நாய்கள் படுத்து உறங்குகின்றன. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.