மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரங்களில் இருபுறமும் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகள் பொருத்தப்படுகிறது. மேலும் கயிறு மற்றும் இரும்பு கம்பிகள் மூலம் விளம்பர பதாகைகள் இறுக்கமாக கட்டி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் அவை பட்டுபோய்விடும் அபாயம் காணப்படுகிறது. எனவே மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்க வேண்டும்.