தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2023-07-09 08:18 GMT

திடல் ஊராட்சிக்குட்பட்ட குளத்தின் தடுப்புச்சுவர் இடிந்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த குளத்தின் அருகில் செல்லும் மூக்குத்தி சாலை உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்ற இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, சாலையை சீரமைத்து, குளத்தின் கரையோரத்தில் தடுப்புச்சுவரையும் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதன், திடல்.

மேலும் செய்திகள்