கோவில்பட்டி அருகே மந்திதோப்பு கிராமத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதால், அங்குள்ள ஓடையில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதாக முத்து விநாயகம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு குப்பைகள் அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.