சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சாலையோரங்களில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.