பயணிகள் அவதி

Update: 2023-07-05 14:40 GMT

தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய ரெயில் நிலையத்தில் ஒன்றாக திகழ்வது பொம்மிடி ரெயில் நிலையம் தான். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொம்மிடி ரெயில் நிலையம் நுழைவுவாயில் பகுதியில் மழைநீர் தேங்குகிறது. இது சம்பந்தமாக சட்டமன்ற உறுப்பினர்கள், தென்னக ரெயில் பயணிகள் நல சங்கம், வணிகர் சங்கம் மற்றும் பொ. மல்லாபுரம் பேரூராட்சி சார்பில் பலமுறை நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் தினமும் தேங்கும் மழை நீரில் பெண்கள், வயதானவர்கள் சிறுவர்கள் ரெயில் நிலையம் செல்லும்போது தடுமாறி கீழே விழுவதும் உண்டு. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அறிவழகன்,பொம்மிடி.

மேலும் செய்திகள்

மயான வசதி