ஓடையை தூர்வார வேண்டும்

Update: 2023-07-05 09:06 GMT

வடக்கு சூரங்குடி சின்னகுளம் பகுதியில் சாலையோரத்தில் கால்வாய் உள்ளது. ஆனந்தனார் கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் இந்த வழியாக அந்த பகுதியில் உள்ள குளத்துக்கு செல்கிறது. தற்போது, கால்வாயில் அந்த பகுதிைய சேர்ந்த சிலர் தென்னை ஓலைகள், குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், கால்வாயில் தண்ணீர் வடிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பைகளால் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, குப்பைகளை அகற்றி ஓடையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாம்சன், வடக்கு சூரங்குடி.

மேலும் செய்திகள்