கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்கப்பாதையின் அருகில் உள்ள சர்வீஸ் ரோடு குறுகலாக உள்ளது. மேலும் அந்த சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளதாலும், அங்கு கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதாலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே கட்டிட கழிவுகளை அகற்றவும், மின்கம்பத்தை சாலையோரமாக மாற்றி அமைக்கவும், சாலையை விரிவுபடுத்தவும் வேண்டுகிறேன்.