நெல்லையை அடுத்த பழைய பேட்டை அம்பேத்கர்நகர் பகுதியில் புதிய சாலையின் மட்டத்தை உயர்த்தி அமைத்தனர். இதனால் சாலையோரம் உள்ள அடிபம்பு மண்ணில் புதைந்தவாறு, பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. எனவே அடிபம்பை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.