வேடசந்தூர் தாலுகா தொட்டணம்பட்டியில் சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக ஜல்லிக்கற்கள், மணல் ஆகியவை சாலையின் நடுவே கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே கட்டுமான பொருட்களை சாலையோரத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.