அரசு ஆஸ்பத்திரிக்குள் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2022-07-23 16:43 GMT

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்குள் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவை அங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் கொண்டு வரும் உணவுகளை கீழே தள்ளிவிட்டு சிதறிவிடுகின்றன. அதுமட்டுமின்றி கூட்டமாக வரும் மாடுகள் பொதுமக்களை முட்டிவிடுகின்றன. இதன் காரணமாக சிகிச்சைக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அச்சத்துடன் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர். மாடுகள் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் உள்ள குப்பைத்தொட்டிகளில் இரை தேடி அவற்றையும் கீழே தள்ளி விடுகின்றன. இதனால் பொதுமக்கள் மூக்கை மூடியபடி குப்பைத்தொட்டிகளை கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்