தென்காசி- நெல்லை இடையே நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ராமச்சந்திரபட்டினம்- மேல மெஞ்ஞானபுரம் இடையே சாலை விரிவாக்கம் செய்த நிலையில், அங்குள்ள மின்கம்பங்களை இடமாற்றவில்லை. இதனால் சாலையின் நடுவில் மின்கம்பங்கள் இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பங்களை சாலையோரம் மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.