தெருநாய்கள் தொல்லை

Update: 2023-07-02 10:44 GMT
  • whatsapp icon

ஊட்டி கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவை அந்த வழியாக நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி செல்கின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் கூட்டம் கூட்டமாக சாலையை கடப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்