அறிவிப்பு பலகை அமைக்கப்படுமா?

Update: 2023-07-02 06:29 GMT

அறிவிப்பு பலகை அமைக்கப்படுமா?

வேர்கிளம்பியில் இருந்து திருவட்டார் செல்லும் சாலையில் வெட்டுக்குழி பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து சாலை இரண்டாக பிரிந்து ஒன்று ஆற்றூர் பகுதிக்கும், மற்றொன்று திருவட்டார் பஸ் நிலையத்திற்கும் செல்கிறது. இந்த வெட்டுக்குழி பகுதியில் எந்தவித அறிவிப்பு பலகையோ, பாதுகாப்பு குறியீடோ, மின்விளக்கு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் இந்த பகுதியில் வரும்போது வழி தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி அறிவிப்பு பலகை, பாதுகாப்பு குறியீடுகள் மற்றும் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி/

மேலும் செய்திகள்