காஞ்சிபுரம் மாவட்டம், முருகன் காலனி பச்சையப்பன் விளையாட்டு மைதானம் பின்பக்கம் உள்ள சிறிய பாலம் உடைந்து 6 மாதங்கள் ஆகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பாலத்தை கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து, அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.