சென்னை, மேற்கு அண்ணாநகர் கிழக்கு வாசல் சாலையில் உள்ள கழிவறை பராமரிக்கப்படாமல் சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால், துர்நாற்றமும் வீசுகிறது. அருகே பள்ளி இருப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, கழிவறையை சீர்செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.