சென்னை, வேப்பேரி சிக்னல் அருகே ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் நிலையம் முன்பாக, ராட்சத பள்ளம் உருவாகி இருக்கிறது. மழைநீர் கால்வாய்க்கு போடப்பட்டுள்ள இந்த இடத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம் பாதசாரிகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, அசம்பாவிதம் நடப்பதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.