தென்காசி அருகே இடைகால் மெயின் ரோடு பகுதியில் சாலையோரம் வாறுகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் 3 மாதங்களுக்கும் மேலாக பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதால், அங்குள்ள கடைகளுக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது. மேலும் அங்கு கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகால் அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.